இஸ்ரேலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் முழக்கம்
இஸ்ரேலை கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முழக்கமிட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 15:49 GMT
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று வெள்ளிகிழமை ஜீம்மா தொழுகையை முடித்து விட்டு பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து பதாகை ஏந்தி முழக்கம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மேலப்பாளையம், பேட்டை, சுத்தமல்லி, பாளையங்கோட்டை, சந்தை பேட்டை பள்ளிவாசல் அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கம் நடைபெற்றது.