வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு
எலச்சிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் பெ.ஜெயமாலா விடுத்துள்ள அறிக்கையில்,
வேளாண் சங்கமம் 2023 வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் - 2023 வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 27.07.2023, ,28.07.2023, 29.07.2023 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் , மானிய உதவிகள் பெற திட்டபதிவு, செயல் விளக்கம், கலை நிகழ்ச்சி, 300 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது மற்றும் இக்கருத்தரங்கிற்கு வருகை புரியும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். எனவே எலச்சிபாளையம் வட்டார விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் .
எலச்சிபாளையம் ஒன்றிய திமுக செயலாளரும், வட்டார அட்மா மேலாண்மை குழு தலைவருமான எம்.தங்கவேல் முன்னிலையில் வேளாண்மை உதவி இயக்குநர் பெ.ஜெயமாலா வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு குறித்த துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கிய போது விவசாயிகள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.