சிங்களம்கோம்பை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

Update: 2023-07-27 04:52 GMT

விவசாயிகள் கோரிக்கை

எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள கைகாட்டி சிங்களம்கோம்பையில் உள்ள சரப்பள்ளி ஏரி உள்ளது. இது சுமார் 68 ஏக்கர் பரப்பளவு கொன்ற ஏரியா ஆகும். இதில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும் பொழுது அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதை தடுப்பதற்காக ஏரி அருகே உள்ள விவசாயி பூபதி வயது (55) என்பவர் செல்லிபாளையம் ஏரியில் அனுமதி பெற்று மண் அள்ளி வந்து கொட்டி உள்ளார்.

இந்த நிலையில் இதை பார்த்த கிராம உதவியாளர் அருண் வயது (30) அந்த விவசாயிடம் ரூ. 40 ஆயிரம் பெற்றுக் கொண்டு சிங்களம்கோப்பை ஏரியிலிருந்து மண்ணை அள்ளி விவசாய நிலத்தில் மண் கொட்டியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து சிங்களம்கோப்பை ஏரிக்குச் சென்ற சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் பிரபாகர் ஏரியில் மண் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து புகார் கொடுத்த விவசாயிகள் மற்றும் விவசாய நிலத்தின் உரிமையாளர் பூபதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அப்பொழுது அங்கிருந்து விவசாயிகள் முதலில் சிங்களம்கோம்பை ஏரியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், தண்ணீா் வெளியேறும் பாதை சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும், மேலும் தண்ணீர் வரும் பாதையையும் சரி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர். அப்பொழுது எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா பிஜேபி சேர்ந்த செந்தில் பாரதி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News