சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 12 துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Update: 2023-09-15 10:40 GMT

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 4,000 மாணவிகளுக்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பல்வேறு 12 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிப்பதற்கான 2 வார கால பயிற்சி முகாம் துவங்கியது. இந்த துவக்கவிழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினர், நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் குமாரவேல், விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திறன் மேம்பாட்டுத் துறை பயிற்சியாளர்கள் டேலி, ஜி.எஸ்.டி வல்லுனர் ஏரினா திவ்யா,அழகுகலை வல்லுநர் பிரீத்தி, ஆரி தொழில்நுட்ப வல்லுநர்கள் மல்லிகாபானு, காயத்ரி, சன்மதி மற்றும் நவீன ஆடை வடிவமைப்பாளர்கள் பொன்னி, ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு அரங்குகளில் 4,000 மாணவிகள் அதிநவீன தையல் பயிற்சி, ஐந்து வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆரி வடிவமைப்பு, உச்சி முதல் உள்ளங்கால் வரை இளம்பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஷன் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், வணிகவியல் துறையின் டேலி தொழில்நுட்பம் மற்றும் ஜி.எஸ்.டி சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட ௧௨ வகையான துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாணவிகளின் திறன் மேம்பாடு வல்லுனர்களால் பரிசீலிக்கப்படுகின்றன.சிறப்பாக தனித்திறமைகளை வெளிகாட்டிய மாணவிகளுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் குமாரவேல், விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் மாணவியர் அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மோகன்பாரதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News