புலிமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Update: 2023-07-24 04:53 GMT
சேந்தமங்கலம் அடுத்த பொம்மசமுத்திரம் கிராமம், ஆர்.பி. புதுாரில் அமைந்துள்ள புலிமலையில் 1000 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல 500 படிகட்டுகளை கடந்து சென்று மலையின் உச்சியில் இருக்கும் புலிமலை முருகன் சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.
சஷ்டியை முன்னிட்டு ஆர்.பி.புதுார் புலிமலை முருகன் சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பல்வேறு அபிசேகங்கள், தீபாரதனைகள் நடந்தது. புலிமலை முருகன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புலிமலையின் உச்சிக்கு சென்று முருகன் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் புலிமலை முருகன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.