எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சாதனை
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் தாளாளர் இளவரசன் நினைவாக முதலாம் ஆண்டு கையுந்து போட்டி, முன்னாள் மாணவர்களால் இரு நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், சென்னை ஆகிய ஊர்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. தாளாளர் ரவீந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அணியினர் இரண்டாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தணிகாசலம் செய்திருந்தார்.