மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி
குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் சார்பில் மாநில அளவில் ஆண்கள் இரட்டையர் இறகுபந்து போட்டி நடந்தது.
குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் சார்பில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் இரட்டையர் இறகுபந்து போட்டியை முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ தொடக்கி வைத்தார். இதில் 32 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை குமாரபாளையம் கார்திக்சபரி, நவீன்- அணியினர், இரண்டாம் பரிசினை பவானி கவின், குப்புராஜ் அணியினர், மூன்றாம் பரிசினை குமாரபாளையம் அரவிந்த், பிரனேஷ் அணியினர், நான்காம் பரிசை ஆத்தூர் அஸ்வின், மணி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அபெக்ஸ் கிளப் தலைவர் விடியல் பிரகாஷ் பரிசினை வழங்கி பாராட்டினார். சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சந்திரன், சம்பத்,வெங்கடேஷ், பாபு, சுந்தர், ஹரிகிருஷ்ணன், தீனா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.