பள்ளி நேரங்களில் குப்பையை அகற்றும் மாணவர்கள்
திண்டுக்கல்லில் பள்ளி நேரங்களில் குப்பை அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபடுவதால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 06:52 GMT
குப்பையை அகற்றும் மாணவர்கள்
திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி மேல்பள்ளியில், குப்பைகளை அகற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் வகுப்பு நேரங்களில் அங்கு படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் வகுப்பு நேரங்களில், எந்த காரணத்தைக் கொண்டும் பிற பணிகளுக்கு அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பது விதிமுறை.அவற்றையும் மீறி சில பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.