திமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றம்
Update: 2023-08-16 11:47 GMT
சேந்தமங்கலம் முத்து மெஸ் உரிமையாளர் கணபதி திமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நாமக்கல் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான K.P.ராமலிங்கம், நாமக்கல் பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.