ஆன்லைன் மூலம் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர் தகவல்;

Update: 2023-08-11 06:50 GMT

மாவட்ட ஆட்சியர் தகவல்

நாளை அனைவரும், ஆன்லைன் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக முதலமைச்சர் தலைமையில் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று 11ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், நாளை 11 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்க வேண்டும்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்கும் வகையில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்தில் இருந்துது, செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்போர்ஸ்மெண்ட்பீரோ.ஓஆர்ஜி/பிளெட்ஜ் என்ற வெப்சைட் வழியாக ஆன்லைனில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த உறுதிமொழியினை ஏற்றுக் கொள்பவர்கள், தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து அதற்கான சான்றிதழை ஆன்லைன்மூலமே பெறலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உறுதிமொழியேற்று, நாமக்கல் மாவட்டத்தை போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News