தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தாயார் மறைவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்
உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
தமிழக நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி நாமக்கல்லில் காலமானார்.
நாமக்கல், நகராட்சிக்குட்பட்ட சேலம் ரோட்டில் உள்ள என்ஜிஜிஓ காலனியைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது, சென்னையில், தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த, அவரது தாயார் லீலாவதி (72), கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லீலாவதி நேற்று 20 ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற உதயச்சத்திரன், அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்துள்ளார்.
நாமக்கல் - சேலம் சாலை, முருகன் கோயில் பின்புறம், NGGOS காலனியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அவர்களது உடலுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வீட்டு வசதி துறை அமைச்சர் செ.முத்துசாமி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம், கே.பொன்னுசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கரூர் மாவட்ட ஆட்சியர் சிவசங்கர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் மற்றும் , நகர கழக செயலாளர் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், நாமக்கல் நகர மன்ற தலைவர் து.கலாநிதி மற்றும் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.