தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தாயார் மறைவு அமைச்சர்கள், எம்.பி எம்.எல்.ஏ நேரில் அஞ்சலி
Update: 2023-09-22 05:00 GMT
அஞ்சலி
நிதித்துறை அரசு முதன்மை செயலாளர் உதயசந்திரன் தாயார் திருமதி லீலாவதி தங்கராஜ் அவர்கள் உடல்நல குறைவால் சேலம் மாவட்டம் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அன்னாரது உடலுக்கு நாமக்கல் நகராட்சியில் உள்ள அவர்களது இல்லத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம். கே.பொன்னுசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.