தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

Update: 2023-09-09 06:17 GMT

மாவட்ட செயற்குழு கூட்டம்

காளிப்பட்டியில் தமிழ்நாடுஅரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் நடந்த ரேஷன் கடை பணியாளர்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார். இதில், உதகமண்டலம் கூட்டுறவு பண்டகசாலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை கண்டுகொள்ளாத பணியாளர் விரோத போக்கில் ஈடுபடும் நீலகிரி இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் கண்டித்தும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறிய பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் நியாய விலை கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்த விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவி உயர்வு மாவட்ட இடமாறுதல் அளித்த பிறகு புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தும் அனைத்து மாவட்ட இணைப்பதிப்பாளர்களும் நீதிமன்ற அவமதிப்பு கடிதம் வழங்கப்பட்ட பிறகு வேகவேகமாக பணியாளர்களின் கோரிக்கையை புறந்தள்ளி புதிய பணியாளர்களை நியமனம் செய்துள்ளது. இதனால் இணைப்பதிவாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு நிலை தேர்வு நிலை குறித்து, கூடுதல் பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையை மாநில பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம், தற்போது பணியில் உள்ள ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு பனிக்காலத்தை கணக்கில் கொண்டு பிடித்தம் செய்து ஓய்வூதியம் வழங்கப்பட்ட பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் பாலாஜி, பொருளாளர் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் ராஜேந்திரன் உள்பட 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News