தமிழ்நாடு அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டம்.

Update: 2023-09-06 11:20 GMT

பிச்சை அளிக்கும் போராட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் மத்திய அரசு ஒதுக்குகின்ற பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சி நிதியை திருடி மாற்றுத்திட்டங்களுக்கு செலவழிக்கும் மு .க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன் , பொதுச் செயலாளர்கள் தினேஷ்குமார், சுபாஷ் மற்றும் சரவணராஜன், மாவட்டச் செயலாளர்கள், பட்டியல் அணி பொதுச் செயலாளர்கள் செந்தில் குமார், சாந்தாமணி துணைத் தலைவர்கள் செங்கோட்டையன், செல்ல வெங்கடேசன் செயலாளர் ராஜவேல், ராமசாமி ஒன்றிய தலைவர்கள் பழனிவேல், சக்கரபாணி, பெரியசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள், பிரிவு நிர்வாகிகள் ஒன்றியத் தலைவர்கள் மற்றும் காவி சொந்தங்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் பல கிராமங்களில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பட்டியல் சமூக மக்கள் இன்று வரை கூட வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. வருகின்ற நாட்களில் இது போன்ற தீண்டாமை கடைபிடிக்கும் கோவில்களை முற்றுகையிட்டு மாபெரும் ஆலய நுழைவு போராட்டம் பாஜக பட்டியல் அணி சார்பில் நடத்தப்படும் என்று பேசினார்.

Tags:    

Similar News