அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

சென்னை அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2023-07-05 08:25 GMT

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எல்டாம்ஸ் ரோடு , எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை, செனடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சாலை அமைய உள்ளது. வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிப்பால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் வகையில் தாம்பரம் ,கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லும்போது சிரமத்திற்கு உள்ளாகிறது. 

Advertisement

இதன் காரணமாக அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News