மேம்பால பணிகள் மேற்கொள்ள தற்காலிக அலுவலக அறை தயார்

Update: 2023-08-11 10:30 GMT

அலுவலக அறை

குமாரபாளையத்தில் மேம்பால பணிகள் மேற்கொள்ள தற்காலிக அலுவலக அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்கமேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்தது.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் விபத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதால் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இதேபோல் அதிக வாகனங்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு உள்ளது. தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, எம்.ஜி.ஆர். நகர் , குமாரபாளையம் நகரம், பவானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கத்தேரி பிரிவில்தான் சாலையை கடந்து செல்கிறது. அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் இந்த சாலையை கடந்துதான் சென்றாக வேண்டும். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பல விபத்துக்கள் நடந்து பல குடும்பங்கள் தவித்து வரும் நிலையும் உண்டு. இதனை தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகள் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என பலதரப்பட்ட நபர்கள் கோரிக்கையின் பலனாக தற்போது மேம்பாலம் கட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக பாலம் கட்டுமான பணிகள் சம்பந்தமான தற்காலிக அலுவலக அறை கத்தேரி பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News