மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
மாவட்ட ஆட்சியர் கள ஆய்வில் ஈடுபட்டார்.
By : King 24x7 Website
Update: 2023-10-31 06:18 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு களஆய்வுகள் மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, அவர்களை பயன்பெற செய்து வருகிறார்கள். அந்தவகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மைகேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி, பழவிதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில் துறைரீதியாக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும்;, அதன் பயன்கள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.