பாண்டிச்சேரியை சேர்ந்த மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் கைது
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் இந்திய உணவுக் கழக கிடங்கில் லாரி ஓட்டுனரை தாக்கிய 3 பேர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 04:48 GMT
சுமை தூக்கும் தொழிலாளர்கள் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்கிற்கு, அரிசி மூடைகளை இறக்க வந்த லாரி ஓட்டுனர், மணல்மேடு பிரபு என்பவரிடம் தகராறு செய்து அவரை தாக்கி மண்டையை உடைத்த இந்திய உணவுக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்களான பாண்டிச்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், செல்வம், சிவபெருமாள் ஆகிய மூன்று நபர்களையும் செம்பனார் கோவில் போலீசார் கைது செய்தனர்.