சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி கல்லூரியில் பாரம்பரிய நாட்டியாஞ்சலி, முத்தமிழ் விழா
சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்ஙமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் மன்ற விழா விவேகானந்தா கலையரங்கத்தில் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முத்தமிழ் விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினர். தமிழ்த் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் மெய்வேல் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வி பட்டம் பெற்ற மதுரை செந்தமிழ் கல்லூரியின் துணை முதல்வரும், தொலைக்காட்சி பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி கலந்து கொண்டு, கல்லூரியில் பயிலும் 1,700 மாணவிகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ‘பெண் மை’ இலக்கிய இதழை வெளியிட்டார் தொடர்ந்து முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி சிறப்புரையாற்றுகையில், ‘பெண் மை இலக்கிய இதழில் மாணவிகளின் படைப்பாற்றல் பிரமிக்கத் தக்க வகையில் உள்ளது; தமிழ்த்துறை மாணவிகள் மட்டுமல்லாமல் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன், வணிகவியல், நியூட்ரிஷன் டயாடீக்ஸ், கணினி அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறை மாணவிகளும் செந்தமிழில் தங்கள் படைப்பாற்றலை பிரதிபலித்து உள்ளனர்; தமிழ் என்றும் காலத்தால் அழியாத செம்மொழி என்பதை மாணவிகள் நிரூபித்துள்ளனர்’ என குறிப்பிட்டார். அதன்பின் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட முத்தமிழில் மாணவிகளின் கலாச்சார நாட்டியாஞ்சலி நடைபெற்றது. பண்டைய தமிழ் நாகரீகம், கலாச்சாரம், பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நாட்டிய நாடகங்களை மாணவிகள் அரங்கேற்றினர். கும்மியாட்டம், பறையடி, சிலம்பம், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட செம்மொழிக்கே உரித்தான கலாச்சாரங்களை மாணவிகள் வெகு நேர்த்தியாக மேடையில் அரங்கேற்றினர். இசையிலும் நாட்டியத்திலும் தங்கள் திறமைகளை மாணவிகள் வெளிப்படுத்தினர். நாட்டியாஞ்சலியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், துறைத்தலைவர்கள் முனைவர் மெய்வேல், டாக்டர் கலைவாணி, பேராசிரியர் தனலட்சுமி ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். முத்தமிழ் விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் டாக்டர் சுந்தரமூர்த்தி, பேராசிரியர் சக்திவேல் மற்றும் தமிழ்த்துறை மாணவியர் அமைப்பினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.