கடனை செலுத்த முடியாமல் தலைமறைவு வாழ்க்கை: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் கதறல்

Update: 2023-09-13 06:11 GMT

பெண்கள் கதறல்

குடும்ப சூழ்நிலை காரணமாக, பைனான்ஸ் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல், தலைமறைவு வாழ்க்கை வாழ்வதால், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த குப்புச்சிபாளையம், ஒழுகூர்ப்பட்டி மண்டகத்துபாறை கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் தேங்காய் எடுக்கும் பணியிலும், நார் கயிறு திரிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் குடும்பத் தேவைக்கு, பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று, வாரம் தோறும் தவறால் செலுத்தி வந்தோம். ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் சேர்ந்து, இந்த கடன் பெற்றுள்ளோம். ஒவ்வொருவரும், குறைந்த பட்சம் ரூ. 40 ஆயிரம் முதல், அதிக பட்சம் ரூ. 3 லட்சம் வரை கடன் பெற்றுள்ளோம். அவற்றில் பாதி தொகையை செலுத்தி விட்டோம். தற்போது, எங்களுக்கு வருமானம் குறைந்து விட்டதால், கடனை முறையாக செலுத்த முடியவில்லை.கடனை செலுத்த முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறோம்.

அதனால், மைக்ரோ பைனான்சில் பணியாற்றுபவர்கள், எங்களை தவறாக பேசி வருகின்றனர். வீட்டில் வந்து மிரட்டுகின்றனர். அதனால், கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறோம். எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News