கொங்கு கலைக்குழு வள்ளி கும்மி அரங்கேற்றம்

Update: 2023-07-24 05:24 GMT

வள்ளி கும்மி அரங்கேற்றம்

குமாரபாளையத்தில் கொங்கு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடந்தது.

குமாரபாளையத்தில் கொங்கு கலைக்குழு சங்ககிரி மேற்கு வலையக்காரனூர் அணியினர் சார்பில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ.ஈஸ்வரன் பங்கேற்று வாழ்த்தி பேசி, நடன நிகழ்விலும் பங்கேற்றார். இவர் பேசியதாவது:

2009 ல் என்னால் துவக்கி வைக்கப்பட்ட இந்த வள்ளி கும்மி ஆட்டம் தற்போது மாநிலம் முழுதும் புகழ் பெற்று வருகிறது. தாய்மார்கள் இதில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி. மிக விரைவில் 10 ஆயிரம் கலைஞர்கள் ஒரே இடத்தில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நிர்வாகிகள் சூர்யமூர்த்தி, சந்திரசேகர், துரைராஜா, ராகவேந்திரா பாலிடெக்னிக் முதல்வர் விஜயகுமார், ஊர் கவுண்டர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Similar News