கால்நடை மருத்துவ சிகிச்சை, விழிப்புணர்வு முகாம்
மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில், கீழ்க்கண்ட இடங்களில் நாமக்கல், கால்நடை பராமரிப்புத்துறையுடன் நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் இணைந்து மிகப்பெரிய அளவிலான மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் காலை 9.30 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முகாமானது மல்லசமுத்திரம் ஒன்றியம் கே.கூத்தம்பாளையத்தில் வரும் 21.07.2023 அன்றும், இராசிபுரம் கூனவேலம்பட்டி ஆயா கோவிலில் அடுத்த மாதம் 04.08.2023 அன்றும் முகாம் நடைபெற உள்ளது.
1. கால்நடைகளுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைப் பணிகள்.
2. வெறிநாய் தடுப்பசி, ராணிகட் தடுப்பூசி.
3. சிறிய அறுவை சிகிச்சைகள்
4. செயற்கைமுறை கருவூட்டல்
5. Ultra sound scan பரிசோதனை
6. ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரித்தல்
7. தாது உப்பு கவை வழங்குதல்
8. விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அசோலா, புல்நறுக்கும் கருவி, புல்கரணைகள், sex sorted semen, சரிவிகித தீவனம், தூய்மையான பால் உற்பத்தி, அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு தொடர்பான விவரங்கள் காட்சிபடுத்துதல்.
9. கால்நடைகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பான விவரங்கள்
10. கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கான பதில்
11. கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை
12. நாய் கண்காட்சி
13. சிறந்த கன்று பராமரிப்பிற்கான பரிசு வழங்கப்படும்.
எனவே கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள மேற்கண்ட நாட்களில் நடைபெறும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.