ராசிபுரத்தில் விநாயகர் ஊர்வல பகுதிகள் மாவட்ட எஸ்.பி ச.ராஜேஷ்கண்ணன் நேரில் ஆய்வு
ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ராசிபுரம் போலீசருக்கு மாவட்ட எஸ்.பி ச.ராஜேஷ்கண்ணன் அறிவுரை வழங்கினார்.
அப்போது விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மேலும் விநாயகர் சிலை உயரம் குறித்தும் கேட்டறிந்து மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான சேந்தமங்கலம் பிரிவுச் சாலைப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் கோனேரிப்பட்டி, ராசிபுரம் அண்ணா சாலை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளோரிடம் ஏற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் எனவும் விழா ஏற்பாடுகள் செய்யும் குழுவினர் உடன் ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, ராசிபுரம் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.