கணவரிடம் பிரிந்து வந்த மனைவி, இரு மகள்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

Update: 2023-09-09 06:19 GMT

மனைவி, இரு மகள்கள் ஒப்படைப்பு

குமாரபாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் மையத்தில் கணவரிடம் பிரிந்து வந்த மனைவி, இரு மகள்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். லட்சுமி, 36, லத்திகா ஸ்ரீ,12, மது ஸ்ரீ, 7, என்ற மூவர், சங்ககிரி காவல் நிலையத்தில் கணவன் கைவிடப்பட்டதாக கூறி புகார் அளித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவியிடம் கேட்டனர். இவர்களை போலீஸ் தரப்பில் குமாரபாளையம் பாச இல்லத்தில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு அனுமதி கேட்டதையடுத்து அவர்கள் தங்குவதற்கு பாசம் அமைப்பின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு நாள் கழித்து அந்தப் பெண்ணும் குழந்தைகளும் கணவனுடன் செல்ல விருப்பமில்லை என்ற தெரிவித்த காரணத்தினால், சங்ககிரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் கோவையில் இருந்து வந்து, பெண் மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News