நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மகளிர் உரிமை விண்ணப்ப படிவங்கள்
கே.பி.இராமசுவாமி வழங்கினார்
Update: 2023-08-19 08:38 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்ப படிவங்களை நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.இராமசுவாமி முன்னிலையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.ஜோதிலட்சுமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.