இரும்பு குழாய்களை திருடி பதுக்கிய வாலிபர் கைது
கெங்கவல்லி அருகே பைப்லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் இரும்பு குழாய்களை திருடி பதுக்கிய வாலிபர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 09:38 GMT
இரும்பு குழாய்களை திருடி பதுக்கிய வாலிபர் கைது
கெங்கவல்லி; கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில், ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், பைப்லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே பிரமாண்ட இரும்பு குழாய்களை அடுக்கி வைத்துள்ளனர். சுமார் 7 கி.மீ., பைப்லைன் பதிக்கும் பணியை, ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் மகன் சந்தோஷ்குமார்(35) என்பவர் ஒப்பந்தம் எடுத்திருந்தார் கடலூர் மாவட்டம் புவனகிரி வேலாங்கிபட்டு பகுதியைச் சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் அரவிந்தன் (30) என்பவர், பணிகளை செய்து வந்தார். 8 மாத காலமாக இப்பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் இதுகுறித்து அவருடன் பணியாற்றிந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியில் இரும்பு குழாய் திருடிய வழக்கில், அரவிந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த சந்தோஷ்குமார், உடனடியாக தெடாவூர் பகுதியில் பணிக்காக வாங்கிய இரும்பு குழாய்களை சரிபார்த்தபோது, சுமார் 150 இரும்பு குழாய்கள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனிடம்ஜாமீனில் வெளி வந்த அரவிந்தனிடம் விசாரித்த போது, ₹10 லட்சம் மதிப்பிலான இரும்பு குழாய்களை திருடியது தெரிய வந்தது. அவற்றை விற்பதற்காக தெடாவூர் சுவேதநதிக்கரையில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதன்பேரில், கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலா வழக்குப்பதிந்து அரவிந்தனை கைது செய்தார். அவரிடமிருந்து ₹10 லட்சம் மதிப்பிலான இரும்பு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அரவிந்தனை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். பணியை முடிக்க வேண்டி, சந்தோஷ் குமார் பலமுறை அரவிந்தனை தொடர்பு கொண் டும் போனை எடுக்கவில்லை புகார் தெரிவித்தார். தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.