நாமக்கல் அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் செயல் வீரர்கள் கூட்டம்
நாமக்கல்லில் நாளை அமமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறுகிறது.
By : King 24x7 Website
Update: 2024-01-09 04:56 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை 10.1.2024 புதன்கிழமை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மற்றும் கரூர் மேற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பங்கேற்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆலோசனையும், மற்றும் செயல் வீரர்கள், பொறுப்பாளர்களுக்கு தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கழகத் துணைப் பொதுச் செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், மண்டல பொறுப்பாளருமான சி. சண்முகவேலு, கழக துணைத் தலைவர் எஸ். அன்பழகன், ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.பி. பழனிவேல், நாமக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம். முத்துசரவணன், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.பி. நல்லியப்பன்,கரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் வரவேற்புரை ஆற்றுகின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நாமக்கல் வடக்கு மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூ,ர் சார்பு அணி செயலாளர்கள், நாமக்கல் தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள், நாமக்கல் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள், மற்றும் கரூர் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள், மேலும் மாநில, மாவட்ட ,நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழகம் ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொள்கின்றனர் என வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.பி. பழனிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.