பிரபல ஸ்வீட் கடை பூட்டை உடைத்த அதிமுக வினர்

Update: 2024-09-25 05:54 GMT

பிரபல ஸ்வீட் கடை பூட்டை உடைத்த அதிமுக வினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிரபல ஸ்வீட் கடை உரிமையாளர் குடோனில் பட்டப்பகலில் அதிமுக பிரமுகர்கள் அடியாட்களுடன் சென்று பூட்டை சுத்தியால் அடித்து உடைத்தும், கட்டிங் மெஷின் வைத்து பூட்டை வெட்டி எடுப்பு

பட்டப்பகலில் அடியாட்களுடன் உள்ளே புகுந்த அதிமுகவினர் பூட்டை வெட்டி எடுக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பு




 


காஞ்சிபுரத்தில் ஒரு அடையாளமாக விளங்கும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியான மேட்டு தெரு பகுதியில் இயங்கும் பிரபல கன்னியப்பன் ஸ்வீட் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் மறைந்த கன்னியப்பன் இவருக்கு பன்னீர்செல்வம், சரவணன், முருகதாஸ் ஆகிய மூன்று மகனும், இரண்டு பெண் உள்ளனர், மூத்த மகன் ஆனா பன்னீர்செல்வம் குடும்ப நண்பரான காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் தற்போது பெண் கவுன்சிலரின் கணவருமான தேவதாஸ் என்பவர் ஸ்வீட் கடையில் உரிமையாளர் கன்னியப்பன் இருக்கும்போது நெருங்கிய நண்பனாக இருந்த நிலையில் அவர் மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வத்துடன் நெருங்கி பழகி பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்துள்ளார். இந்நிலையில் பன்னீர்செல்வத்துடன் நீண்ட நாள் பழகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் பன்னீர் செல்வம் மறைந்தார்.

Advertisement

இந்நிலையில் மேட்டுதெரு பகுதியில் உள்ள ஸ்வீட் கடை அருகாமையில் கன்னியப்பன் என்பவர் மூத்த மகன் ஆன பன்னீர் செல்வதற்கு ஒரு இடத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த இடத்தில் ஸ்வீட் கடைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் உள்ளிட்டவைகளுடன் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறையாக இருந்து வருகிறது.

பன்னீர்செல்வம் இறந்தவுடன் சில மாதங்கள் கழித்து குடும்ப நண்பரான அதிமுக நிர்வாகி தேவதாஸ் என்பவர் பன்னீர்செல்வம் சகோதரர்களான சரவணன் மற்றும் முருகதாஸ் ஆகிய இருவரிடம் மேட்டு தெருவில் ஸ்வீட் கடை அருகே உள்ள பன்னீர்செல்வம் இடத்தை அவர் உயிருடன் இருக்கும் முன்பு இடத்தை தற்போது விற்பனையில் ரூ.7 கோடி மதிப்பு உள்ள நிலையில் வெறும் ரூ.1.60 கோடிக்கு இடத்தை விற்றதாக பன்னீர்செல்வம் சகோதரர்களிடம் தெரிவித்தாது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அவர் உயிருடன் இருக்கும் பொழுது இடத்தை விற்றதாகவும், அதனை வாங்கியதாகவும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அவர் இறந்த சில மாதங்கள் கழித்து இதுபோன்று சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் சகோதரர்கள் செய்ய முடியாமல் இருந்த நிலையில் நீதிமன்றத்தை நாடினார், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதிமுக பிரமுகர் தேவதாசின் அடியாட்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேட்டு தெரு பகுதியில் உள்ள குடோனில் நுழைவு வாயிலில் உள்ள ஷட்டரை பூட்டுகளை சுத்தியால் அடித்து உடைத்தும் கட்டிங் பிளேடால் பூட்டை வெட்டி எடுக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இன்று இரவு மீண்டும் அதிமுக பிரமுகர் தேவதாஸ் அடியாட்களுடன் மீண்டும் செட்டரை உடைத்து உள்ளே சென்றுள்ளார்

இதனை அறிந்து பன்னீர்செல்வத்தின் தம்பிகள் சென்றதை தேவதாசை உள்ளே வைத்து பூட்டி உள்ளனர். உடனடியாக விஷ்ணு காஞ்சி போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவலர்கள் இருவர் பிரிவினர்களையும் சமரசம் செய்தும் உடன்பாடு ஏற்படாததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எதிர்த்தரப்பினர் இடையே கடும் மோதல் உருவாகி உள்ள நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News