பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2024-10-01 12:07 GMT

பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழைநீரால் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அலுவலகத்தை தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு மாற்றியமைக்க கோரி பள்ளிக்கல்வித்துறைகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்

பள்ளியின் ஆய்வின்பொழுது பள்ளி வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார்




 



தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக இன்று உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாலாஜாபாத் பகுதியில் உள்ள அண்ணா அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் காஞ்சிபுரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் பள்ளியில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையை குறித்து அலுவலரிடம் கேட்டறிந்து, மாணவர்கள் வருகை பதிவை எடுத்து ஆய்வு செய்து பள்ளிக்கு வராத மாணவனின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து அவர்களுடன் பேசி பள்ளி தொடர நடவடிக்கைகளை கேட்டுக்கொண்டு பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை

சி எஸ் ஆர் நிதியிலிருந்து 400 கோடியை தாண்டி உள்ளது, தமிழ்நாடு முழுவதும் 1964 புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, தனியார் பள்ளிகள் அரசு விடுமுறைகளில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக வாட்ஸப் அல்லது தொலைபேசி வாயிலாக புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழையால் பாதிப்படைய கூடிய முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் தலைமை ஆசிரியர் அறையை தரைதலத்தில் இருந்து முதல் தளத்திற்கும் மாற்று வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News