தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Update: 2024-09-20 07:57 GMT

மதுரை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே? எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன; அதில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்? புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா?; தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா?. தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; பல கல்லூரிகளில் வசதிகளே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளது.

Similar News