சென்னை ஐஐடியில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-04 13:01 GMT
சென்னை ஐஐடியில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவர்களுக்கு மருந்துகள் எதுவும் செலுத்தப்படவில்லை என்று வனவாணி பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறாமல் சோதனை மேற்கொள்ளக் கூடாது எனவும் பெற்றோரின் அனுமதியின்றி சோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் வனவாணி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.