4 மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி !
By : King 24x7 Angel
Update: 2024-12-04 05:19 GMT
பெஞ்சல் புயல் சூறையாடிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் பாதித்துள்ளது. பெஞ்சல் புயல் கடந்த 30ம்தேதி இரவு கரையை கடந்தது. அப்போது பெய்த பேய் மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.