இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக நியாய விலைக் கடைகள் உள்ளன : அமைச்சர் பெரியகருப்பன்
By : King 24x7 Desk
Update: 2024-12-09 06:02 GMT
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலைக் கடைகளும், 1126 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக நியாய விலைக் கடைகள் உள்ளன என்றும் எளிய வகையில் பொருட்களை பெற 34,793 நியாய விலைக் கடைகள் உள்ளன என்றும் அமைச்சர் பெரியகருப்பன் குறிப்பிட்டுள்ளார்.