சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்வு!!

Update: 2024-12-17 05:12 GMT

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும் ஒரு சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது. இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News