2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
By : King 24x7 Desk
Update: 2024-12-18 08:16 GMT
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ‘அம்பேத்கரை சிறுமைப்படுத்துவோரை மக்கள் ஏற்க மாட்டார்கள்’ என அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.