மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!!

Update: 2024-12-17 05:12 GMT

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 118.53 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 7368 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Similar News