லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மீது வழக்கு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-28 05:48 GMT
மதுரையில் லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் தனபாண்டி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்துள்ளது. மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துகளை ஏலம் விடுவதை தாமதிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்படுகிறது. ஏலம் விடாமல் தாமதிப்பதற்காக துணை வட்டாட்சியர் தனபாண்டி ரூ.1.65 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.