டெல்லி கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி: 23 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
By : King24x7 Rafi
Update: 2024-05-25 05:34 GMT
நர்மதா பச்சாவ் அந்தோலன் தலைவரும், சமூக ஆர்வலருமான மேதா பட்கர் மீது தற்போதைய டெல்லி துணைநிலைஆளுநராக உள்ள வி கே சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்தார். சக்சேனா 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய குடிமை உரிமை கவுன்சில் தலைவராக இருந்த போது மேதா பட்கர் அவருக்கு எதிராக தெரிவித்த கருத்து தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் சர்மா இந்த வழக்கை விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய அவர், சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் மே 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.