தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை !
By : King 24x7 Angel
Update: 2024-11-19 07:35 GMT
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால், வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையும், மற்றவர்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகம் பேர் வயது முதிர்வு வரம்புக்குள் வருவதால், சுகாதாரம், ஓய்வூதியம், மூத்த குடிமக்களுக்கான சேவைகள் கணிசமாக அதிகரிக்கிறது. இது அரசுக்கு நிதி சுமையை ஏற்படுத்துவதுடன் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், அதிக நிதி ஒதுக்க வேண்டியது இருக்கிறது. உயர் கல்வியை தரமானதாக வழங்க அதிக நிதி தேவைப்படுகிறது. நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான கட்டமைப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சேவைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது உள்ளது.