டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி தர கூடாது: சு.வெங்கடேசன் எம்.பி.
By : King 24x7 Desk
Update: 2024-11-19 06:08 GMT
venkatesan
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி தர கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. அரிட்டாபட்டி துவங்கி அழகர்மலை வரை மாமதுரையின் வளங்களையும், வரலாற்றையும் அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் தந்த ஒன்றிய அரசு அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.