மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுரை

Update: 2024-11-19 07:25 GMT

சவுமியா சுவாமிநாதன்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் சார்பில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டு அறிவுரை கூறினார்.

அவர் கூறியது, முறையற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளின் (ஆன்டிபயாடிக்ஸ்) பயன்பாட்டினால் இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். குறிப்பிட்ட நோய் பாதிப்பை தெரிந்து கொள்ளும் முன்னரே நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போக்கு உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களும் மருத்துவமனைகளும் நோய் எதிர்ப்பு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News