பருவநிலை மாற்றம் காரணமாக பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்
டெல்லியில் 127.22 டிகிரி பதிவானது உண்மையா?டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை மையத்தில் நேற்று 127.22 டிகிரி வெப்ப நிலை பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள வெப்பநிலை சென்சார் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் ெமாஹபத்ரா. தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ைமயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 113 டிகிாி முதல் 120.38 டிகிரி வரை பதிவாகி இருக்கிறது. ஆனால் முங்கேஷ்பூரில் 127.22 டிகிரி பதிவாகி உள்ளது. இது சென்சார் பிழை அல்லது உள்ளூர் சூழல் காரணமாக இருக்கலாம். இதுதொடர்பாக ஆய்வு நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘டெல்லி முங்கேஷ்பூரில் பதிவான வெயில் அளவு இன்னும் அதிகாரப்பூர்வமாக இல்லை. அந்த வெயில் அளவை சரிபார்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ நிலை விரைவில் தெரிவிக்கப்படும்’ என்றார்