ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Update: 2024-05-30 06:13 GMT

Kejrival

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்றும், இதற்காக ஜூன் 1ம் தேதியுடன் முடிவடையும் இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவல் உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை அடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்தது. இதனை இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கமான ஜாமின் கோரி கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Similar News