இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார்

Update: 2024-06-02 00:58 GMT

Kejrival 

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார். டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன்1ம் தேதி வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய உள்ளார்.

Similar News