மேற்குவங்கத்தில் ஒபிசி சான்றிதழ்கள் ரத்து செய்யபட்டது பாஜகவின் சதி: முதல்வர் மம்தா பானர்ஜி

Update: 2024-05-23 05:45 GMT

Mamta

மேற்கு வங்க பிற்படுத்தபட்ட வகுப்பினர் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதிக்கு பின் 37 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நீதிபதிகள் ஏற்கனவே பணியில் உள்ள அல்லது இடஒதுக்கீட்டின் பலனை பெற்ற அல்லது அரசின் எந்த தேர்விலும் வெற்றிபெற்றவர்கள் இந்த தீர்ப்பால் பாதிக்கபடமாட்டார்கள் என்று கூறியுள்ளது.இந்த தீர்ப்பின்மூலம் சுமார் 5 லட்சம் சான்றிதழ்கள் செல்லாததாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோம் என்றும், இதர பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு தொடர்ரும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வீடு வீடாக ஆய்வு நடத்தி, மசோதாவை தயாரித்து, சட்டசபையில் நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அமைப்புகளை பயன்படுத்தி சட்டத்தை முடக்க பாஜக முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

Similar News