முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: இன்று நடைபெற இருந்த சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து
By : King24x7 Rafi
Update: 2024-05-28 12:50 GMT
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரளா அரசு தரப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கேரள அரசின் விண்ணப்பம் இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதாக இருந்த நிலையில் கூட்டம் ரத்தானது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.