ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Update: 2024-04-04 06:16 GMT

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 2022ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால், தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Similar News