பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி

Update: 2024-06-01 06:01 GMT

Prav

பிரஜ்வல் ரேவண்ணா 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எஸ்.ஐ.டி தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் அசோக் நாயர், பிரஜ்வலை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட 42வது ஏசிஎம்எம் நீதிமன்ற நீதிபதி கே.என்.சிவகுமார், பிரஜ்வலை ஜூன் 6ம் தேதி வரை 6 நாட்கள் எஸ்.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டது.

ஆண்மை பரிசோதனை: பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Similar News