பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ்: வெளியுறவு அமைச்சகம் அதிரடி
By : King24x7 Rafi
Update: 2024-05-25 05:44 GMT
டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேட்டு பிரஜ்வலுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரஜ்வல் விவகாரம் குறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் சட்டப்படி தான் ரத்து செய்ய முடியும். அதற்கு நீதிமன்றம் அல்லது காவல் துறை கோரிக்கை தேவை. அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மே 21ம் தேதி வெளியுறவு அமைச்சகத்திற்கு கிடைத்தது. அதன்பின்னர் உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே 23ம் தேதிதான் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன என்று ஜெய்சங்கர் கூறினார்.