செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50%-க்கு கீழ் சரிந்தது!
By : King24x7 Rafi
Update: 2024-05-30 06:35 GMT
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50%-க்கு கீழ் சரிந்துள்ளது. கோடை வெப்பம் அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் அணைகளின் நிலை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.